Featured Post Today
print this page
Latest Post

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவ
ு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

( Source : kgjawarlal.wordpress.com )
 
0 comments

Whatever we say, whatever we do, people will always find something to say..


0 comments

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
0 comments

திருச்சி மலைக் கோட்டை பற்றிய தகவல்.



திருச்சி மலைக் கோட்டை இமாலய மலையைவிட அதிக பழமையானது . (Rock fort,Trichy )

திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.
0 comments

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.


கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (
Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.

முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.
0 comments

கொய்யா... சில கட்டுப்பாடுகள்:


நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வர
லாம். கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. ஆஸ்துமா, வாதநோய், மற்றும் ‘எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது. கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.



0 comments

A touching Poem...!!!


I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.
0 comments

அங்கேயுமா?


மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.

கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்?
0 comments

புலி வருது......


புலி வருது!

முன்பு ஒருமுறை இந்த கதையை படித்திருந்தாலும், இந்த கதை சொல்லும் நீதி எவ்வளவு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் ஒருமுறை படித்த பொழுது ஞாபகத்திற்க்கு வந்தது!

காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு 
மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
0 comments

சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......


ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

0 comments

இதை படிங்க.........


ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்

0 comments

இதையும் படிங்க....


நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!
கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.

0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. மானாமதுரை அஞ்சல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger