கருப்பு திராட்சை பற்றிய தகவல்.

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின
ில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் உயர்வினை அறிந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு நான்கு மில்லியன் யூனிட்டு கள் பயன்படுத்துகின்றனர்.

கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பணிகள்

கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீ கரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது.

ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது.

ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின்
ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.

சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.

பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.

நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

இவ்வளவு அருமை வாய்ந்த திராட்சை விதைகளை வீசியெறிந்து விட்டு வெறும் தசைகளை மட்டும் தின்று பயன் என்ன, சொல்லுங்கள்?


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. மானாமதுரை அஞ்சல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger